Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே.ஜி.எஃப் -2 படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

கே.ஜி.எஃப் -2 படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
, திங்கள், 4 ஜனவரி 2021 (20:52 IST)
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில்,கேஜிஎஃப் படத்தின் டீசர் வரும் ஜனவரி 8 ஆம் தேதி  வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் சேர்ந்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின்  க்ளைமேக்ஸ் காட்சிகள் இப்பொது படமாக்கப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகலாம் என அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், தற்போது கே.ஜி.எஃப் படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது நடிகர் யஷ் நடிப்பில் கன்னட சினிமாவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள கே.ஜி.எஃப் திரைப்படத்தின் டிரைலர் வரும்  ஜனவரி 8 ஆம் தேதி, காலை 10;18க்கு வெளியாகௌம் என அறிவித்துள்ளனர்.

இதனால் யாஷின் ரசிகர்கள் சாண்டில்வுட் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இப்படத்தின் டீசருக்கான வெயிட் பண்ணியுள்ளனர்.#kgfchapter2

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவித்த தமிழக அரசு