Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன வேற மாறி இருக்கு?... குலு குலு படத்தின் செம்ம எமோஷனல் sneak peek காட்சி!

என்ன வேற மாறி இருக்கு?... குலு குலு படத்தின் செம்ம எமோஷனல் sneak peek காட்சி!
, புதன், 27 ஜூலை 2022 (11:22 IST)
சந்தானம் நடிக்கும் குலுகுலு படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்த படத்துக்கு குலு குலு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவரின் ஒருவரின் கதையாக உருவாகும் இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் இப்போது ஜூலை 29 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது குலுகுலு படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. வழக்கமாக சந்தானம் படங்கள் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும். ஆனால் இந்த காட்சி செண்ட்டிமெண்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்: படப்பிடிப்புக்கு போகும் ஐடியாவே இல்லையா?