Publish Date: Wed, 13 Jul 2022 (17:52 IST)
Updated Date: Wed, 13 Jul 2022 (17:58 IST)
சந்தானம் நடித்த குலுகுலு என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குலுகுலு படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பித்துவிட்ட நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது
இந்த படத்தின் டிரைலர் சுமார் 2 நிமிடம் உள்ள நிலையில் இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மட்டும் காமெடி காட்சிகள் உள்ளன. எனவே இந்த படம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சந்தானத்த்ஹின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை ஆடை ரத்தின குமார் இயக்கியுள்ளார் என்பதும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
siva
Publish Date: Wed, 13 Jul 2022 (17:52 IST)
Updated Date: Wed, 13 Jul 2022 (17:58 IST)