Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காண்டிராக்டரை தாக்கிய வழக்கு… பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரான சந்தானம்!

Advertiesment
காண்டிராக்டரை தாக்கிய வழக்கு… பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரான சந்தானம்!
, சனி, 16 ஜூலை 2022 (09:32 IST)
நடிகர் சந்தானம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு அடிதடி வழக்கில் ஈடுபட்டதாக அவர் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு குலு குலு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தானம் தான் பணம் கொடுத்திருந்த ஒரு காண்ட்ராக்டரிடம் அதைக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரைத் தாக்கியதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக சந்தானமும் சம்மந்தப்பட்ட நபரும் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தபோது நடிகர் சந்தானம் நேரில் ஆஜராகினார். ஏற்கனவே சில முறை அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தகக்து. வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணையைத் தள்ளிவைத்துளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் முறையாக பா ரஞ்சித்துடன் இணையும் ஜி வி பிரகாஷ்…. வைரலாகும் புகைப்படம்