இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி!

vinoth
வியாழன், 18 செப்டம்பர் 2025 (09:55 IST)
தமிழ் சினிமாவில் இரட்டை இசையமைப்பாளர்களாக பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வந்தவர்கள் சங்கர் –கணேஷ். இதில் சங்கர் ஏற்கனவே காலமாகிவிட்டாலும் இன்னமும் சங்கர் கணேஷ் என்ற பெயரிலேயே தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறார் கணேஷ்.

இந்நிலையில் நேற்று அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அவரது மகனும் நடிகருமான ஸ்ரீ பேசியுள்ளார்.

அதில் “எங்கள் அப்பாவுக்கு இதய பிரச்சனை உள்ளது. அதனால் மருத்துவர்கள் அவரைப் பாடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் மேல் உள்ள பாசம் காரணமாக திமுகவின் முப்பெரும் விழாவில் பாடுவதற்கு ஒப்புக்கொண்டார். அதற்கான ஒத்திகையில் ஈடுபட்ட போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் நீர் கோர்த்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments