Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சம்சாரம் அது மின்சாரம் 2’: இயக்குவது யார் தெரியுமா?

Advertiesment
சம்சாரம் அது மின்சாரம் 2’: இயக்குவது யார் தெரியுமா?
, வெள்ளி, 6 நவம்பர் 2020 (09:10 IST)
பிரபல இயக்குனர் விசு கடந்த மார்ச் மாதம் காலமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் இயக்கி நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான ‘சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தின் 2ஆம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விசுவின் சிஷ்யர் இயக்கும் இந்த படத்திற்கு விசுவின் மகள் உதவி வசனகர்த்தாவாக பணிபுரிகிறார். இதுகுறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 
இயக்குனர்‌ விசு எழுதி இயக்கிய ஏவிஎம்‌ சம்சாரம்‌ அது மின்சாரம்‌: தேசிய விருது பெற்ற மாபெரும்‌ வெற்றி படம்‌. நீண்ட இடைவெளிக்கு பிறகு மறைந்த இயக்குனர்‌ விசு அவர்கள்‌ கடைசியாக கதை திரைக்கதை வசனம்‌ எழுதியுள்ள சம்சாரம்‌ அது மின்சாரம்‌ 2' அவரின்‌ லட்சிய படைப்பு. இப்படத்தை “மக்கள்‌ அரசன்‌ பிக்சர்ஸ்‌” நிறுவனர்‌ திரு.ராஜா அவர்கள்‌ தயாரிக்கிறார்‌. இந்நிறுவனம்‌ விமல்‌ நடிக்கும்‌ “எங்கள்‌ பாட்டன்‌ சொத்து”, விதார்த்‌, யோகிபாபு நடிக்கும்‌ “உலகமகா உத்தமர்கள்‌”, பா.விஜய்‌ இயக்கத்தில்‌ ஜீவா அர்ஜுன்‌ நடிக்கும்‌ “மேதாவி” போன்ற படங்களை தயாரித்து வருகிறது.
 
சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2 திரைப்படத்தை விசுவின்‌ சிஷ்யன்‌ வி.எல்‌.பாஸ்கர்ராஜ்‌ இயக்குகிறார்‌. இவர்‌ ராஜ்‌ டிவியில்‌ அகடவிகடம்‌ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்‌.
 
இசை. பரத்வாஜ்‌
பாடல்கள்‌ - பா.விஜய்‌
ஒளிப்பதிவு - ராஜவேல்‌ மோகன்‌
படத்தொகுப்பு - சுரேஷ்‌ அர்ஸ்‌
கலை - வனராஜ்‌
மக்கள்‌ தொடர்பு - டைமண்ட்‌ பாபு
தயாரிப்பு நிர்வாகம்‌ - ரமணி
 
உதவி வசனகர்த்தாவாக விசுவின்‌ மகள்‌ லாவண்யா விசு பணியாற்றுகிறார்‌. இதில்‌ முக்கிய கதாபாத்திரத்தில்‌ நடிக்க திரு.ராஜ்கிரண்‌ வசம்‌ பேசப்படுகிறது. மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. “சம்சாரம்‌ அது மின்சாரம்‌ - 2: திரைப்படத்தின்‌ கதையை பற்றி இயக்குனர்‌ பாஸ்கர்ராஜ்‌ கூறுகையில்‌, ‘இது சிறுவர்கள்‌, இளைஞர்கள்‌, பெரியவர்கள்‌, அனைவரும்‌ ரசிக்ககூடிய கதம்பமான ஒரு குடும்ப கதை. அனைத்து தரப்பட்ட மக்களையும்‌ திரையரங்கு நோக்கி வரவழைக்கும்‌ இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை’ என்று கூறியுள்ளார்.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலாஜி-ஷிவானி காதலுக்கு வேட்டு வைத்த அர்ச்சனா!