திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.
உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளது.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நீதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் இறங்கிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். அவரோடு நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் ஆளுனர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்ததால் பரபரப்பு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து கனிமொழி உள்ளிட்ட 119 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கழக மகளிரணி செயலாளர் திருமதி கனிமொழி தலைமையில் #HathrasHorror -ஐ கண்டித்து நடந்த ஒளி ஏந்திய பேரணியைத் தடுத்து, கழகத்தினரைக் கைது செய்ததைக் கண்டிக்கிறேன். அடிமைகள் தம் விசுவாசத்தைக் காட்ட உ.பி. காவல்துறையைப் போல் தமிழகக் காவல்துறையை நடக்கச் செய்தது கேவலம் என பதிவிட்டுள்ளார்.