தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை.
சமீபகாலமாக அவர் நடித்த குஷி மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர். தாய்மொழியான தமிழில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை.
இதையடுத்து சமந்தா தற்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான “ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்” என்ற நிறுவனத்தின் மூலமாக ஷுபம் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் பற்றி பேசியுள்ள சமந்தா “நான் சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்ட நேரத்தில் பல விஷயங்கள் குறித்து யோசித்தேன். அதில் ஒன்றுதான் தயாரிப்பு நிறுவனம். என்னால் எதிர்காலத்தில் நடிக்க முடியுமா என்று கூட உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் என்னால் திரைப்படங்களை உருவாக்க முடியும் என்று நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.