Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘கடவுளேக் கூட விமர்சிக்கப்படுகிறார்… நான் எல்லாம் யாரு?’- விமர்சனங்கள் குறித்து ரஹ்மான் பதில்!

Advertiesment
ஏ ஆர் ரஹ்மான்

vinoth

, வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (11:15 IST)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். அதில் “தங்களுக்குள் நிரப்ப முடியாத இடைவெளி விழுந்துவிட்டதாக” அவர் கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவாகரத்து முடிவை ஏ ஆர் ரஹ்மானும் ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து ஏ ஆர் ரஹ்மான் மீது சில அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் சாய்ரா பானுவே ரஹ்மான் போன்ற ஒரு மனிதரைத் தன் வாழ்வில் சந்தித்ததில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தன்  மேல் வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்துப் பேசியுள்ள ரஹ்மான் “பொது வாழ்க்கையில் இருக்கும் அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே. ஏன் கடவுள் கூட விமர்சிக்கப்படும் போது நானெல்லாம் யார்?. நாங்கள் ஒன்றாக இருந்த போதும் இப்போது தனித்தனியாக இருக்கும் போதும் கூட நாங்கள் அன்பும் மரியாதையும் கொண்டு இருந்தோம். இந்தியர்கள் எல்லோரும் கர்மாவை நம்புபவர்கள். நானும்தான். நான் யாருடைய குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசினால் என் குடும்பத்தைப் பற்றி இன்னொருவர் அப்படி பேசுவார்.  அனைவருக்கும் அம்மா, மனைவி, சகோதரி இருக்கிறார்கள். அதனால் யாரும் மற்றவரைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதில்லை. அப்படியும் பேசும் சிலருக்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்களுக்கும் குடும்பம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“விவேக் இறந்தப்ப நான் போகலன்னு விமர்சிச்சாங்க… நானே அப்போ…” – முதல் முறையாக மனம் திறந்த வடிவேலு!