இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் “எனது எனக்கு பிடித்தமானதை வாங்கி விட்டேன்” என தனது தனிப்பட்ட மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் தக்லைப் உள்பட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், Instagram-ல் அவ்வப்போது பதிவு செய்யும் ஏ.ஆர். ரஹ்மான் சற்று முன் ஒரு எலக்ட்ரிக் காரின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், “எனக்கு பிடித்தமான இந்த காரை நான் வாங்கி விட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த எலக்ட்ரிக் காரை வாங்கி விட்டேன். இந்த காருக்கு பிரத்யேகமான ஒரு சத்தத்தை உருவாக்கியுள்ளோம்” என்றும் கூறியுள்ளார்.
அதோடு, “ஆட்மோஸ் என்ற சத்தத்தை இந்த காருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கினேன். அதற்கான விலையும் கொடுத்துள்ளேன்” என்று அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த காரின் விலை சுமார் ₹30 லட்சம் என கூறப்படுகிறது. இந்த காரை மேலும் பலரும் வாங்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனது மனைவியுடனான விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.