Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட நடிகையின் வெப்சீரீஸ் புதிய சாதனை

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:34 IST)
விஜயுடன் தெறி,  கத்தி போன்ற படங்களில் நடித்த சமந்தா நடித்துள்ள ’தி ஃபேமிலி மேன்’ தொடருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இப்படத்தின் டிரைலர் சாதனை படைத்துள்ளது.

ராஜ் & டிகே-யின் பிரபலமான ‘THE FAMILY MAN’ தொடரின் புதிய சீஸன் ஜூன் 4 ஆம் தேதி அன்று அறிமுகமாகவுள்ளதை அமேசான் பிரைம் வீடியோ ஒரு சுவாரஸ்யமான டிரெய்லர் மூலம் அறிவித்துள்ளது.

தி ஃபேமிலி மேனின் புதிய சீசன் இன்னும் பெரிய வீச்சுடன், அதிக சவால்களோடு மேம்பட்ட எதிரியைக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியாவிலும் 240 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யக்கிடைக்கும். அமேசான் ஒரிஜினல் சீரிஸின் இப்புதிய சீசன் அற்புதமான இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டி.கே ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பத்ம ஸ்ரீ வெற்றியாளர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி மற்றும் சீமா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் சமந்தா அக்கினேனியின் டிஜிட்டல் அறிமுகத்தையும் கொண்டுள்ளது. , இந்த சீஸனில் ஸ்ரீகாந்த்திவாரி சமந்தாஅக்கினேனி நடிக்கும் ராஜி என்ற புதிய, சக்திவாய்ந்த மற்றும் கொடூரமான எதிரியை எதிர்த்து போராடவுள்ளார்.

இந்த 9 பாகங்கள் கொண்ட திரில்லர், ஒரு நடுத்தரவர்க்க குடும்பமனிதர் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உளவாளி என்ற இரண்டு பாத்திரங்களுக்கு இடையில் ஸ்ரீகாந்த் தொடர்ந்து போராடுவதையும், தாக்குதலில் இருந்து நாட்டை காப்பாற்ற முயற்சிப்பதையும் காணலாம்.

இந்நிலையில் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் போராளிகளுக்கும் இடையே கூட்டணி தோன்றியுள்ளதாக இந்த டிரைலரில் ஒரு வசனம் வருகிறது. மேலும் இலங்கையில்நடைபெற்ற போரை தவறான விதத்தில் சித்தரித்துள்ளதாகவும் நெட்டிசன்கள் #FamilyMan-2AganistTamils என்ற ஹேஸ்டேக் மூலம் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

எனவே, இந்த சீரிஸின் இரட்டை இயக்குநர்கள்  இப்புதிய சீசன் ஒளிபரப்பாகும் வரை காத்திருந்து பார்த்துவிட்டு கதை, அதிலுள்ள கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சீரிஸ் இரண்டு நாளி சுமார் 37 மில்லியன் பார்வையாளரக்ளைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரவிமோகன் - கார்த்தி.. நண்பர்களின் ஆன்மீக பயணம்..!

நடிகை அபிநயா திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments