Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தளபதி 67 தாறுமாறு... ஹிட் இயக்குனருடன் கைகோர்த்த விஜய்?

தளபதி 67 தாறுமாறு... ஹிட் இயக்குனருடன் கைகோர்த்த விஜய்?
, திங்கள், 24 மே 2021 (11:17 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 65 படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. 
 
இதற்கு அடுத்ததாக தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரிக்கிறார். இப்படியான நேரத்தில் அதற்கு அடுத்த படமான தளபதி 67 படத்தை குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது கார்த்தி, நாகார்ஜுனா நடித்து வெளியாக ’தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி விஜய்யை இயக்கப்போவதாகவும் தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. உறுதி செய்யப்படாத இந்த செய்தியை கேட்ட தளபதி ரசிகர்கள், விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்த பின்னரே அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகுவார். அப்படி இருக்கும் போது இது எப்படி என சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்கின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரியான செருப்படிக் கேள்வி: ரசிகரின் கேள்வியை விமர்சனம் செய்த பார்த்திபன்!