நடிகர் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்ததாக நடிகை மீரா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமானவர் மீரா கிருஷ்ணன். சமீபத்தில் தடம் படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிக்க வந்த வாய்ப்பை இவர் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். அதற்குக் காரணம் விஜய் சேதுபதிக்கும் இவருக்கும் 10 வயதுதான் வித்தியாசம் என சொல்கிறாராம் மீரா. ஆனால் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் அவரோடு நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.