விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கப்போவது கீர்த்தி சுரேஷ்தான் என சொல்லப்படுகிறது.
விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. அதையடுத்து அவர் நடிக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு சென்னைக்கு வந்து விஜய்யின் மேலாளரான ஜெகதீஷை அடிக்கடி சந்திப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யின் அடுத்த பட தயாரிப்பாளர்கள் பட்டியலில் தில் ராஜுவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அதை தெலுங்கு சினிமா இயக்குனரான வம்சி பைடிபல்லி இயக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் மற்றொரு தகவலாக விஜய்யின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்த படத்தில் விஜய்க்கு 2 கதாநாயகிகள் எனவும், அதில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.