Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமந்தாவுக்கு கிடைத்த அங்கீகாரம்… முதல் இந்திய நடிகை!

சமந்தாவுக்கு கிடைத்த அங்கீகாரம்… முதல் இந்திய நடிகை!
, ஞாயிறு, 24 ஜனவரி 2021 (08:57 IST)
நடிகை சமந்தா நடித்துள்ள பேமிலி மேன் 2 சீரிஸின் ப்ரமோஷன் பணிகள் நடந்துவருகின்றன.

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி மற்றும் சந்தீப் கிஷான் உள்ளிட்ட பலர் நடித்த சீரிஸ் பேமிலி மேன். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும் நடித்துள்ளார். இது சமந்தா முதன் முதலாக ஓடிடிக்காக நடிக்கும் தொடராகும். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தா முதன் முதலாக இந்த சீரிஸில் கொடூரமான வில்லிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

இதனால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சீசன் 2 ன் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸை தென்னிந்தியாவிலும் பிரபலமாக்கும் விதமாக தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் சமந்தாவுக்கென்று ரசிகர் கூட்டம் உள்ளதால் அவரை முன்னிலைப் படுத்தி இப்போது ப்ரமோஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிவிட்டரில் சமந்தாவுக்கு என்று தனியாக எமோஜியை வெளியிட்டுள்ளனர். இது இந்திய நடிகைகளிலேயே சமந்தாவுக்கு மட்டுமே கிடைத்துள்ள அங்கீகாரம் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்ஸ் பேக் உடலுக்காக நான் குடிப்பதே இல்லை… தன் மீதான புகாருக்கு விஷ்ணு விஷால் பதில்!