Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடராஜனின் கொரோனா சோதனை முடிவு வெளியானது!

Advertiesment
நடராஜனின் கொரோனா சோதனை முடிவு வெளியானது!
, சனி, 23 ஜனவரி 2021 (17:03 IST)
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட நிலையில் அதன் முடிவு வெளியாகியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. முன்னதாக டி20 போட்டிகள் மூலம் பிரபலமடைந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயண ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் புகழ் பெற்றுள்ளார். இதையடுத்து டெஸ்ட் போட்டியிலும் இடம்கிடைத்துக் கலக்கினார்.

ஆஸ்திரேலியா தொடரை சிறப்பாக முடித்து இந்தியா வந்துள்ள நடராஜனுக்கு சொந்த ஊரில் சாரட் வண்டியில் வைத்து மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால் அவரை மருத்துவ அதிகாரிகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் முடிவு இன்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு