தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ரக்த் பிரம்மாண்ட் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார்.
சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அவர்களின் விவாகரத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யா சக நடிகை சோபிதா துலிபாலாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் சமந்தா தற்போது வரை சிங்கிள் ஆக இருக்கிறார்.
இதற்கிடையில் சிட்டாடல் தொடரில் நடித்த போது அதன் இயக்குனர் ராஜ் நிடிமோருடன் காதலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. ராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனாலும் சமந்தாவும் ராஜும் பல நேரங்களில் பொது இடங்களில் ஒன்றாக உலா வந்துகொண்டிருக்கின்றனர். ராஜின் மனைவி சியாமனி சமீபகாலமாக சமூகவலைதளங்களில் சூசகமாக இவர்கள் உறவு குறித்துக் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ராஜ் மற்றும் சமந்தா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.