Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

செம ஜாலியாக டான்ஸ் ஆடும் மஹத் - பிராச்சி: கலக்கல் கல்யாண வீடியோ!

Advertiesment
mahat
, சனி, 30 மே 2020 (08:01 IST)
நடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார்.

இதனால் அந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அவருக்கு வெளியில்  பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருந்தார். யாஷிகா விஷயத்தால் இவர்கள் காதலில் சற்று விரிசல் ஏற்பட்டு பின்னர் மீண்டும் சேர்ந்தனர். அதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அண்மையில் இவர்களுக்கு நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் தான் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் சிம்பு உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் தற்போது தங்களது திருமண வீடியோவை பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் வெளியிட்டுள்ளார். அழகிய இந்த வீடியோ அனைவரையும் ஈர்த்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

250K லைக்ஸ் வந்தால் மைண்ட்ப்ளாக் டிக்டாக் - வித்யாசமாக வார்னர் பதிவு!