அட்லி இயக்கத்தில் இதுவரை வெளியாகி இருப்பது ஐந்தே படங்கள்தான். ஆனால் அந்த படங்களின் வெற்றி காரணமாக இன்று இந்திய அளவில் அறியப்பட்ட இயக்குனராக இருக்கிறார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்டமாக ஒரு அறிவியல் புனைகதைப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது; சாய் அப்யங்கர் இசையமைக்க, ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.
அதனால் இந்த படத்தை இந்தியாவைத் தாண்டியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதனால் ஹாலிவுட்டின் முன்னணி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இந்தியா தாண்டியும் ரிலீஸ் செய்ய பல்வேறு முயற்சிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள அட்லி “எங்களுக்கு தயவு செய்து எங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இதுவரை பார்த்திராத ஒன்றை உருவாக்கி வருகிறோம். கண்டிப்பாக இது சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். பல சிறந்த ஹாலிவுட் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். படம் பற்றி சொல்ல எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.