கூலி டிக்கெட்… போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறாங்க… எஸ் ஆர் பிரபு புலம்பல்!

vinoth
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (13:49 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள ‘கூலி’ படம் இன்னும் 6 நாட்களில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டு ‘A’ சான்றிதழ் பெற்றுள்ளது.  இந்த படம் 2 மணிநேரம் 50 நிமிடம் ஓடும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. பல திரையரங்குகளில் முதல் வார இறுதிவரையில் டிக்கெட் புக்கிங் நடந்துவிட்டது. இந்நிலையில் பலரும் டிக்கெட் கேட்டுப் பலரும் தனக்கு போன் செய்வதாக தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பதிவிட்டுள்ளார்.

அதில் “நிறைய நண்பர்களிடம் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு அழைப்பு வருகிறது. கூலி டிக்கெட் கிரேஸுக்கு நன்றி. ஆனால் டிக்கெட் கையில் இருக்கும் நண்பர்களுக்கு நான் ஃபோன் செய்தால் அவர்கள் எடுப்பதில்லை. நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே, உங்கள் அழைப்புகளை நான் எடுக்காமல் அமைதியாக இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. #கைதி2” என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கமல்& அன்பறிவ் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர்… வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments