ரஜினிகாந்தின் கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடலை இத்தாலிய நடிகை மோனிகா பெலுச்சி பார்த்து பாராட்டியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. இந்த படத்தில் ஆமிர் கான், நாகர்ஜூனா, உபேந்திரா என பல மொழி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படம் நாளை மறுநாள் (ஆகஸ்டு 14) வெளியாக உள்ள நிலையில், அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன.
அதில் முக்கியமாக வைரலாகி வரும் பாடல் பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடிய மோனிகா பாடல்தான். பாடலின் முதல் வரியே மோனிகா பெலுச்சி.. இறங்கி வந்தாச்சு என பிரபல இத்தாலிய நடிகை மோனிகா பெலுச்சியை குறிக்கும் விதமாக இருக்கும். மேலும் அந்த பாடலில் மொனிகா பெலுச்சியின் பிரபலமான சிவப்பு நிற ஆடையை அணிந்து பூஜா ஹெக்டே ஆடியிருப்பார்.
இந்த பாடல் பெரும் வைரலான நிலையில் ரசிகர்கள் பலர் மோனிகா பெலுச்சிக்கே இந்த பாடலை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பாடல் மோனிகா பெலுச்சியின் தோழி மெலிட்டா மூலமாக அவருக்கு வந்து சேர்ந்துள்ளது. அதை பார்த்து வியந்த அவர் ”Loved it” என கூறினாராம். இதை கேட்டதும் தான் மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளானதாகவும், மொனிகா பெலுச்சி பல வகைகளில் தன்னுடைய ஆதர்சம் என்றும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்த சம்பவம் தற்போது பெரும் வைரலாகியுள்ளது.
Edit by Prasanth.K