கரூர் சம்பவ காட்சிகள் ‘ஜனநாயகன்’ படத்தில் வருகிறதா? தீயாய் பரவும் வதந்திகள்..!

Siva
வியாழன், 9 அக்டோபர் 2025 (16:08 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூருக்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவின் சில காட்சிகள், அவரது அடுத்த படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இணைக்கப்பட இருப்பதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால், படக்குழுவினரிடமிருந்து வந்த தகவலின்படி, ‘ஜனநாயகன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என்றும், கிட்டத்தட்ட எடிட்டிங் பணிகளும் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். 
 
இனி எந்தக் காட்சிகளையும் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும், கரூர் காட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். 
 
எனவே, கரூரில் நடந்த கூட்டம் குறித்த காட்சிகள் எதுவும் ‘ஜனநாயகன்’ படத்தில் இருக்காது என்றே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் அசத்தும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

சேலையில் சிக்கென்ற போஸில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற ‘பாம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ்!

விறுவிறுப்பாக நடக்கும் செல்வராகவன் & ஜிவி பிரகாஷ் இணையும் ‘மெண்டல் மனதில்’ படப்பிடிப்பு!

அது தெரியாமல்தான் கேமரா முன்னால் நின்றேன்… 22 ஆண்டுகள் நிறைவு செய்தது குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments