Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுக்காக தான் அவங்கள உள்ள விடல - அறிக்கை வெளியிட்ட ரோகிணி திரையரங்கம்!

இதுக்காக தான் அவங்கள உள்ள விடல - அறிக்கை வெளியிட்ட ரோகிணி திரையரங்கம்!
, வியாழன், 30 மார்ச் 2023 (14:27 IST)
சிம்வுவின் பத்து தல படத்தை காண வந்த நரிக்குறவர் இன சமூகத்தினரை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர். இந்த வீடியோ இணயத்தில் வெளியாகி பலரும் விமர்சித்து திட்டி தீர்த்தனர். 
 
இதையடுத்து ரோகிணி திரையரங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்து தல திரைப்படம் U/A சான்றிதழ் பெற்ற திரைப்படம். எனவே 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இப்படத்தை காண்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. 
 
படத்தை காண வந்த குறிப்பிட்ட சமூகத்தினர்  2,6, 8, 10 ஆகிய வயதுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதனால் தான் எங்களது டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுத்துள்ளார். ஆனால். இதனை சரியாக புரிந்துகொள்ளாத சிலர் வெறுப்புணர்வுடன் அனுமதி மறுக்கப்பட்டதாக வேறு கோணத்தில் பிரச்னையை திருப்புகிறார்கள். இந்த பிரச்னையின் தீவிரத்தை குறைக்க தற்போது அவர்களை படம் துவங்குவதற்கு முன்பாக சரியான நேரத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என கூறி அவர்கள் படம் பார்க்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். 
webdunia
 
12 வயதுக்குக் குறைவான குழந்தைகள் பெற்றோருடன் வந்தால் அனுமதிக்கலாம் என்பது தான் விதிமுறை. ஆனால், ரோகினி திரையரங்கம் ஏதோ சொல்லி சமாளிக்கிறார்கள் என நெட்டிசன்ஸ் கிண்டல் அடித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் படத்தை நான் எடுத்திருந்தால் நான் சொதப்பி இருப்பேன்… பாரதிராஜா பேச்சு!