சமீபத்தில் வெளியான தனுஷின் 'இட்லி கடை திரைப்படம் முதல் நாள் வசூலில் சாதனை படைத்தது. ஆனால், அடுத்த நாளே வசூல் சுமார் 40% சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் முந்தைய படமான 'ராயன்' முதல் நாள் வசூலாக சுமார் 8 கோடி ஈட்டிய நிலையில், 'இட்லி கடை' முதல் நாளில் 9.5 கோடி முதல் 10.5 கோடி வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அடுத்த நாளே வசூல் வெறும் 6.5 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது.
வசூல் சரிவுக்குக் காரணமாக காந்தாரா படத்தின் வெளியீடு என கூறப்படுகிறது. கன்னட படமான 'காந்தாரா' வெளியானதால், பார்வையாளர்கள் இரண்டாக பிரிந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இட்லி கடை திரைப்படம் வெளிநாடுகளிலும் குறிப்பாக அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மற்றும் நியூயார்க் நகரங்களில் திரையரங்குகளில் ஆடியன்ஸ் இல்லாததால் இரண்டாவது நாளே திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. இது தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.