Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சந்தா கட்டணத்தை குறைப்பு

Advertiesment
நெட்பிளிக்ஸ்  ஓடிடி  தளத்தில் சந்தா கட்டணத்தை குறைப்பு
, புதன், 15 டிசம்பர் 2021 (23:12 IST)
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்தியாவில் தனது சந்தா கட்டணத்தை குறைத்துள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தனது சேவையை இந்தியாவில் துவங்கியது. அவ்வப்போது கட்டணம் அதிகரிப்பதாக பேச்சு எழுந்த நிலையில் கட்டணத்தில் ஏதும் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் கட்டணத்தைக் குறைத்துள்ளது நெட்பிளிக்ஸ்.

அதாவது, ரூ.199 ல் இருந்து,ரூ.149 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  பேசிக் பிளான்ரூ.499 ல் இருந்து, 199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் பிளான ரூ.649 ல் இருந்து ரூ.499 ஆக குறைந்துள்ளது. பிரீமியம் பிளான் ரூ.799 ல் இருந்து ரூ.649 ஆக குறைந்துள்ளது.

இது நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகி மாறி வரும் நிலையில், மற்ற ஓடிடி தளங்களுக்கும் இது போட்டியை உருவாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களின் பட்டியல் வெளியீடு!