Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் தனுஷ் ரிலீஸ் செய்த ''செம்பி'' பட டிரைலர்

Advertiesment
sembi
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (15:18 IST)
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகிவரும் செம்பி பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

தமிழில், லீ, மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் செம்பி.  இப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டது எனக் கூறப்படுகிறது.
 

ALSO READ: செம்பி பட டிரையிலரை வெளியிடும் தனுஷ்!
 
சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீடு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடந்தது. இதில்,  இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், செம்பி- படத்தின் இரண்டாவது டிரெயிலரை இன்று  நடிகர் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கும்கி பட போன்று  இப்படமும் வனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கோவை சரளா முதியவர் வேடத்தில் ஒரு குழந்தைக்கு பாட்டியாக நடித்துள்ளார்.  நடிகர் அஸ்வின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், மலை பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் பாடுகள், அரசியல் ஆகியவற்றைப் பற்றிக் கூறுவதாக இப்படம் அமைந்துள்ளது.

இந்த டிரெயிலர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Edited By Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு சூப்பரா செட் ஆகுது கார்ட்டூன் இமேஜில் கலக்கும் ரைசா!