ஜெயம் ரவியின் 32 வது திரைப்படமாக ஜீனி என்ற திரைப்படம் உருவாகி ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
ஏஆர் ரஹ்மான் இசையில் மகேஷ் முத்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்தும் ரிலீஸ் பற்றி எந்த தகவலும் இல்லை.
சமீபத்தில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை டிசம்பர் மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வரும் ரவி மோகனுக்கு இந்த படமாவது திருப்புமுனையாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.