இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா இரு தினங்களுக்கு முன்னர் தன்னுடைய 86 ஆவது வயதில் மறைந்தார். அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டு பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். அவரின் உடல் பார்ஸிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க ஜி குழுமம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரத்தன் குடும்பத்திடம் அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அனுமதி கிடைத்ததும் அவரைப் பெருமைப் படுத்தும் விதமாக அந்த படம் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.