Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Advertiesment
Ratan Tata Quotes

Siva

, வெள்ளி, 11 அக்டோபர் 2024 (14:27 IST)
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று முன்தினம் காலமான நிலையில், ரத்தன் டாடா அறக்கட்டளையின் தலைவர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
 
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். நேற்று அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், ரத்தன் டாடா மறைவுக்கு அடுத்து டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
டாடா அறக்கட்டளை குழுவினர் ஏகமனதாக நோயல் டாடாவை புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும், புதிய தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, அதிகாரப்பூர்வமாக நோயல் டாடா அறக்கட்டளை குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!