Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷின் 51வது படத்தின் நாயகியாக ’வாரிசு’ நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷின் 51வது படத்தின் நாயகியாக ’வாரிசு’ நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
, திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (11:48 IST)
தனுஷின் 51 வது படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தனுஷ் நடித்த இயக்கும் 50-வது திரைப்படம்  படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தனுஷின் 51-வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க விருக்கிறார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ராஷ்மிகா மந்தனாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வாரிசு உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்த ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக தனுசுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தில் மேலும் சில பிரபலங்கள் இணைய வாய்ப்பிருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவரை மனதில் வைத்து அந்த கதை எழுதினேன்… ஆனால் இப்போது என்னிடம் கதை இல்லை.. அனுராக் காஷ்யப் விளக்கம்!