Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

vinoth
வியாழன், 17 ஜூலை 2025 (08:41 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் தங்கள் எல்லைத் தாண்டி பேன் இந்தியா அளவுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்போடு படங்களை உருவாக்கி வருகின்றனர். இதனால் பேன் இந்தியா சினிமா என்ற புதிய வகையினமே உருவாகியுள்ளது. இந்த பேன் இந்தியா சினிமா என்ற வகைமையை உருவாக்கியதில் முன்னத்தி ஏர் என்று எஸ் எஸ் ராஜமௌலியை சொல்லலாம்.

அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின. இந்நிலையில் பாகுபலி படத்தின் முதல் பாகம் ரிலீஸாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ‘பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகுபலியை விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகின்றன. இதையடுத்து பாகுபலி பெயரில் சமூகவலைதளக் கணக்கு தொடங்கப்பட்டு ‘பாகுபலியைக் கட்டப்பா கொல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்?” எனக் கேள்வி எழுப்பினர். அந்த பதிவை பகிர்ந்த நடிகர் ராணா “ நான் கொன்றிருப்பேன்” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments