தி வெர்டிக்ட் பட விழாவில் இயக்குனர் பார்த்திபன், நடிகை சுஹாசினி பேசிக் கொண்டது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா சங்கர் எழுதி இயக்கியுள்ள தி வெர்டிக்ட் என்ற படத்தில் வரலட்சுமி, சுஹாசினி, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது அதில் பேசிய நடிகை சுஹாசினி “சின்ன வயசுல உங்க நடிப்பை பார்த்தேன் என்று பலர் சொல்லும்போது அவ்வளவு சீனியர் நடிகை ஆகி விட்டோமா என்று தோன்றும். அமெரிக்காவில் ஷூட்டிங் நடந்தபோது என் ரசிகை ஒருவர் மொத்த படக்குழுவுக்கு சாப்பாடு தயார் செய்து எடுத்து வந்தார். அப்ப்போதுதான் வயதின் முக்கியத்துவம் தெரிந்தது” என பேசினார்.
அதற்கடுத்து பார்த்திபன் பேசியபோது “பொதுவாக நடிகைகள் 28 வயதிற்கு மேல் தங்கள் வயதை சொல்லமாட்டார்கள். எனக்கு 50 வயது என்று வெளிப்படையாக சொல்லும் அழகி என்றால் அது சுஹாசினிதான். தனது அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி” என்று கூறினார்.
அதற்கு சுஹாசினி என் வயது 50 அல்ல.. 63 ஆகிவிட்டது” எனக் கூற, உடனே பார்த்திபன் “பார்த்தீங்களா.. இதுதான் திமிரு” எனக் கூற அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது.
Edit by Prasanth.K