Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராம்குமார்- விஷ்ணு விஷால் இணையும் அடுத்த படம் தொடங்குவது எப்போது?

ராம்குமார்- விஷ்ணு விஷால் இணையும் அடுத்த படம் தொடங்குவது எப்போது?
, திங்கள், 24 ஜூலை 2023 (07:46 IST)
விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் உருவான ராட்சசன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து நான்கு ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இது ஒரு காதல் பேண்டஸி திரைப்படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முதலில் தனுஷுக்காகதான் எழுதினார் ராம்குமார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இப்போது விஷ்ணு விஷால் நடிக்கவே பட்ஜெட் எல்லாம் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் கொடைக்கானலில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TTF வாசனின் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அனிருத் குரலில் பாடல்!