Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் 50 படத்தில் நடிக்கும் செல்வராகவன்?

தனுஷ் 50 படத்தில் நடிக்கும் செல்வராகவன்?
, செவ்வாய், 11 ஜூலை 2023 (08:52 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்க உள்ளார். இந்த படத்தில் ஏகப்படட் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேப்டன் மில்லர் படம் முடிந்துள்ளதை அடுத்து இந்த படத்தை தனுஷ் உடனடியாக தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் நட்சத்திர குழுவில் இணைந்துள்ளார் தனுஷின் அண்ணனும் நடிகருமான செல்வராகவன். அவரும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இருவரும் இணைந்து நானே வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி… சர்ப்ரைஸ் தகவல்!