Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷ் 50 படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது? லேட்டஸ்ட் தகவல்!

தனுஷ் 50 படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது? லேட்டஸ்ட் தகவல்!
, வெள்ளி, 21 ஜூலை 2023 (09:28 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே தனுஷின் மற்றொரு படமான கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வீடியோவும் அந்த தேதியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால் 34 படத்தின் டீசர் விரைவில்.. மின்னல் வேகத்தில் செல்லும் இயக்குனர் ஹரி!