Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று வெளியாகிறது ராம்சரணின் கேம்சேஞ்சர் படத்தின் ஜருகண்டி பாடல்!

Advertiesment
Ramcharan

vinoth

, புதன், 27 மார்ச் 2024 (06:56 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இந்த பாடல் கடந்த ஆண்டே தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் காரணங்களால் ரிலீஸாகாமல் இருந்த நிலையில் இன்று ராம்சரணின் பிறந்தநாள் பரிசாக வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் மீது கோபம்...ஆனால் ’தக்லைஃப்’ பார்த்த பின் மனம் மாறிய மணிரத்னம்