Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேம் சேஞ்சர் படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!

கேம் சேஞ்சர் படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!

vinoth

, வியாழன், 21 மார்ச் 2024 (07:04 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் மார்ச் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரிலீஸுக்கு பின்னர் ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ஊழல் அரசியலுக்கு எதிராக நேர்மையாக தேர்தல் நடத்த போராடுவதே கதை” எனவும் தங்கள் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தி& நலன் குமாரசாமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!