Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமராஜன் உடல்நலம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

Advertiesment
ராமராஜன் உடல்நலம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
, திங்கள், 18 அக்டோபர் 2021 (13:11 IST)
நடிகர் ராமராஜனின் உடல் நிலை மோசமாக இருப்பதாக வதந்திகள் வெளியானதை அவர் தரப்பு மறுத்துள்ளது.

80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.

அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன் குணச்சித்திர வேடங்கள் தனக்கு வந்தாலும் நடிக்க மறுத்து வருகிறாராம். ஏனென்றால் அவர் இதுவரை 44 படங்கள் ஹீரோவாக நடித்து விட்டாராம். இன்னும் 6 படங்கள் கதாநாயகனாக நடித்தால் உலகிலேயே முதல் 50 படங்கள் கதாநாயகனாக நடித்தவர் என்ற சிறப்பை பெறுவோம் என நினைக்கிறாராம். அதற்குப் பின் எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறாராம்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ராமராஜனின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வதந்திகளை பரப்பினர் சில விஷமிகள். ஆனால் அதை இப்போது ராமராஜன் தரப்பு மறுத்துள்ளது. அவர் நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளிக்கு மாநாடு ரிலீஸ் இல்லை! – சுரேஷ் காமாட்சி அறிவிப்பு!