Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘படையப்பா’ காமெடி மாதிரியே ரஜினி சட்டையை மாற்றி போட்ட நடிகர்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

Advertiesment
முத்து

Bala

, வியாழன், 11 டிசம்பர் 2025 (13:31 IST)
1995ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஒரு கிளாசிக்கான திரைப்படம் தான் முத்து. கே எஸ் ரவிக்குமார் முதன்முதலாக ரஜினியுடன் இணைந்த படம் தான் முத்து திரைப்படம். அது மட்டுமல்ல முத்து திரைப்படத்திற்கு இன்னொரு ஒரு சிறப்பம்சமும் இருக்கிறது. இந்த படம் ஜப்பானில் வெளியாகி அங்குள்ள பார்வையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இது அந்த படத்தின் கிளாசிக் அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது .இந்த நிலையில் முத்து திரைப்படத்தில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை பற்றி அந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
 
முத்து திரைப்படத்தில் ஒரு பிளாஷ் பேக் காட்சி வரும். அதில் அப்பா ரஜினியாக ஒரு பெரிய அரண்மனையில் செட் அமைக்கப்பட்டு அந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அப்போது அப்பா ரஜினி குதிரை வண்டியில் வருவது மாதிரியான ஒரு காட்சி. அந்த படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ரமேஷ் கண்ணாவை அழைத்து நீ அந்த வண்டியில் போய் உட்கார்ந்து கொள். நான் இதை லாங் ஷாட்டில் தான் எடுக்கப் போகிறேன். ரஜினிக்கு தைத்த உடையை நீ போட்டுக்கொண்டு அதில் உட்கார்ந்து கொள். நான் அப்படியே படம் பிடித்து கொள்கிறேன்.
 
க்ளோசப் ஷாட்டில் ரஜினியை வைத்து நான் மீதமுள்ள காட்சிகளை எடுத்து விடுகிறேன் என கூறினாராம். இது ரமேஷ் கண்ணாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. ரஜினியின் பதில் நான் நடிக்கிறதா என தயங்கி இருக்கிறார். ஆனால் ரவிக்குமார் பரவாயில்லை, நீ போய் உட்கார்ந்து கொள் என  ரஜினிக்கு தைத்த உடையை ரமேஷ் கண்ணா போட்டுக்கொண்டு அந்த வண்டியில் போய் உட்கார்ந்து விட்டார். ரவிக்குமாரும் லாங் ஷாட்டில் அந்த காட்சியை எடுத்து விட்டார். இப்போது க்ளோசப் ஷாட்டை எடுக்க வேண்டும். உடனே ரமேஷ் கண்ணா நாம் போட்ட சட்டையை ரஜினி போடப் போகிறாரே? இது அவருக்கு அசௌகரியமாக இருக்குமே என நினைத்து ஆடை வடிவமைப்பாளரை அழைத்து அதில் பர்ஃபியூம், சில வாசனை திரவியங்கள் எல்லாம் அந்த சட்டையில் ஸ்பிரே பண்ண சொல்லி கொண்டிருந்தாராம்.
 
உடனே ரஜினி அருகில் வந்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார். உடனே ரமேஷ் கண்ணா இந்த விவரத்தை சொன்னதும் அட பரவாயில்ல குடுங்க அப்படின்னு அந்த சட்டையை வாங்கிக் கொண்டு ரஜினி அதை போட்டு குளோசப் ஷாட்டை எடுத்து முடித்து இருக்கிறார். இதைப் பற்றி ரமேஷ் கண்ணா கூறும்பொழுது இப்ப உள்ள நடிகர்கள் அப்படி இருப்பார்களா? ஸ்கின் அலர்ஜி வந்துவிடும் என்று நினைத்து போட மாட்டார்கள். ஆனால் ரஜினிஎதுவுமே பார்க்காமல் அந்த சட்டையை வாங்கி போட்டுக் கொண்டார். அது மட்டுமல்ல பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் ஒரு படத்தில் நடித்து முடித்ததும் அந்த படத்தில் வேலை பார்த்தவர்களுக்கு வேட்டி சேலை என்று துணிமணிகள் எடுத்துக் கொடுப்பார்கள்.
 
 
 அப்படி என்ன வாங்கிக் கொடுக்கலாம் என ரஜினி எங்களிடம் ஆலோசனை செய்த போது நான் சும்மா விளையாட்டாக செயின் வாங்கி கொடுங்க என கிண்டலாக கூறினேன். ஆனால் ரஜினி அப்படியே அந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் ஒரு பவுன் செயின் வாங்கி கொடுத்தார். அதில் முத்து என டாலர் போட்டு அந்த செயினை வாங்கி கொடுத்தார். அந்த படத்தில் வேலை பார்க்கும் பொழுது ரஜினி செய்த ஒவ்வொரு விஷயமும் எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது என ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!