Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

Advertiesment
Anirudh
, சனி, 14 ஜூன் 2025 (13:40 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. கூலி படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கூலி படத்தின் முதல் பாதிக்கான வேலைகள் முடிந்து இறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த முதல் பாதியைப் பார்த்த ரஜினிகாந்த் ‘தனக்கு முதல் பாதி திருப்திகரமாக அமைந்துள்ளது’ என லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!