Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

Advertiesment
கூலி

Siva

, செவ்வாய், 10 ஜூன் 2025 (14:34 IST)
கமல்ஹாசன் நடித்த ’தக்லைஃப்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்ததை அடுத்து, இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ’தக்லைஃப்’ படத்தில் விட்டதை 'கூலி' படத்தில் எடுக்க வேண்டும் என்று 'கூலி' படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே சூப்பர் ஹிட் தான் என்றும், அதிலும் ரஜினிகாந்தின் முதன்முதலாக அவருடன் இணைந்து இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறப்படுகிறது.
 
 வரிசையாக தோல்விப் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு 'விக்ரம்' என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ் என்றும், எனவே 'ஜெயிலர்' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ரஜினிக்கு அதைவிட பெரிய வெற்றிப் படமாக 'கூலி' இருக்கும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
எனவே, அண்டை மாநில ரிலீஸ் உரிமைகளான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் ரிலீஸ் உரிமையை பெற விநியோகஸ்தர்கள் போட்டி போடுவதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் சன் பிக்சர்ஸ் காட்டில் மழை என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!