Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பரில் அடுத்த பட அறிவிப்பா? தயாரிப்பாளர் இயக்குனர் யார்?

டிசம்பரில் அடுத்த பட அறிவிப்பா? தயாரிப்பாளர் இயக்குனர் யார்?
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (14:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி நல்ல வசூலை குவித்த நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள் வர இருப்பதை அடுத்து ரஜினியின் 169வது படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ரஜினியின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் பாண்டிராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் அந்த தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
 
இருப்பினும் ரஜினியை வைத்து தயாரித்த அவரது இரண்டு மகள்கள் மற்றும் லைகா நிறுவனம் காத்திருப்பதாகவும் அதேபோல் கார்த்திக் சுப்பராஜ் உள்பட ஒரு சில இயக்குனர்களும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘டாக்டர்’ பட வசூலை முந்தியது ‘மாநாடு’ முதல் நாள் வசூல்