ரஜினி மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சக்கரவர்த்தி இன்று காலமாகியுள்ளார்.
ஆறிலிருந்து அறுபது வரை, சிகப்பு ரோஜாக்கள், ரிஷிமூலம் உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகர் சக்கவர்த்தி.ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினியின் தம்பி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தது அவருக்குக் கவனத்தைப் பெற்றுத் தந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்த நிலையில் மும்பையில் செட்டிலானார்.
இந்நிலையில் இன்று தூக்கத்திலேயே அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அவருக்கு தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.