Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீயாய் வேலை செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… அடுத்த படத்துக்கு ரெடி!

தீயாய் வேலை செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… அடுத்த படத்துக்கு ரெடி!
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (09:29 IST)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதை சமீபத்தில் அறிவித்திருந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்து தான் இயக்கப்போகும் படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். அந்த படத்துக்கு ஓ சாத்தி லால் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர் ராகவா லாரன்ஸை ஒரு படத்தில் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் இசைஞானி இளையராஜாவை சந்தித்ததும் அவரோடு இணைந்து பணியாற்ற உள்ளாரா என்ற யூகங்களை உருவாக்கியது.

இந்நிலையில் இந்த படத்துக்கான திரைக்கதை ஆலோசனை செய்யும் புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைக்குழந்தையோடு பிக்பாஸ் கவின்…. வைரலாகும் ‘டாடா’ பட போஸ்டர்!