ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்!

vinoth
திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (09:54 IST)
தன்னுடைய 73 ஆவது வயதிலும் தனது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் ‘கூலி’ படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக ஒரு இடைவெளி விடப்பட்டிருந்தது. விரைவில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments