Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 நாட்களில் ரூ.500 கோடி வசூல்.. ஜெயிலர் சாதனையை முறியடிக்குமா ‘கூலி’?

Advertiesment
Jailer vs Coolie

Siva

, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (07:57 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான 'கூலி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியான தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
படம் வெளியான ஆரம்ப நாட்களில் சிலர் வேண்டுமென்றே எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தபோதிலும், பலரின் நேர்மறையான மற்றும் கலவையான விமர்சனங்கள் படத்துக்கு கிடைத்தன. இருப்பினும், இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி, வணிக ரீதியாக 'கூலி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த ஆறு நாட்களில் மட்டும் இப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
 
ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் தான் இதுவரை அதிக வசூல் பெற்ற தமிழ் திரைப்படமாக இருந்து வருகிறது. அந்த படம் சுமார் ரூ.650 கோடி வசூலித்த நிலையில், 'கூலி' திரைப்படம் இந்த படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் திரைக்கு வரும் 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம்.. டி ராஜேந்தர் அறிவிப்பு..!