ரஜினிக்காக விஷால் படத்தைத் தள்ளிவைத்த சுந்தர் சி…!

vinoth
திங்கள், 10 நவம்பர் 2025 (17:33 IST)
சமீபகாலமாக ரஜினி வெறும் ஆக்‌ஷன் படங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலானப் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பது அவர் இல்லை டூப்தான் என்று தெரிந்தாலும் ரசிகர்கள் தங்கள் தலைவருக்காக விசிலடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இரத்தமாகப் பார்த்து பூத்துப் போனக் கண்களுக்கு சிறு ஆறுதலாக ரஜினி அடுத்து சுந்தர் சி யோடு இணைந்து பணியாற்றவுள்ள படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சுந்தர் சி தற்போதைய இயக்குனர் போல திரையில் இரத்த ஆற்றை ஓடவைக்கமாட்டார்.

தற்போது சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதையடுத்து சுந்தர் சி விஷால் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ரஜினி படம் காரணமாக தற்போது விஷால் படத்தை ஒத்திவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி படத்தை முடித்த பின்னரே விஷால் படத்தைத் தொடங்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் அழகிய போஸில் அசத்தும் துஷாரா விஜயன்!

ரஜினிக்காக விஷால் படத்தைத் தள்ளிவைத்த சுந்தர் சி…!

விஜய் சேதுபதி & மிஷ்கினின் ‘டிரெய்ன்’ படத்தின் ரிலீஸுக்குத் தேதி குறிச்சாச்சு!

பத்திரிக்கையாளரின் மன்னிப்பை ஏற்க மறுத்த கௌரி கிஷன்..!

புதுமுகங்களை வைத்துக் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம்… மதுரையில் தொடங்கிய ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments