Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் படிக்கும் போது அந்த கேரக்டருக்கு விஜயகாந்த்தான் தோன்றினார்… ரஜினியின் லிஸ்ட்!

Advertiesment
பொன்னியின் செல்வன் படிக்கும் போது அந்த கேரக்டருக்கு விஜயகாந்த்தான் தோன்றினார்… ரஜினியின் லிஸ்ட்!
, வியாழன், 8 செப்டம்பர் 2022 (09:30 IST)
சில தினங்களுக்கு  முன்னர் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் பொதுவாக புத்தகத்தின் அளவைப் பார்த்துதான் படிப்பேன். பொன்னியின் செல்வன் 2000 பக்கத்துக்கு மேல் என்றதும் படிக்கவே இல்லை. ஆனால் ஒரு முறை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வந்தியத் தேவன் கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்கவைக்கலாம் எனக் கேட்ட போது அவர் என் பெயரைக் கூறினார். அப்போதுதான் நான் ஆர்வமாகி அந்த நாவலைப் படித்தேன்” எனக் கூறினார்.

மேலும் “படிக்க ஆரம்பித்ததும் பிரம்மிப்பில் ஆழ்ந்து போனேன். அப்போதே என் மனதுக்குள் எந்த கதாபாத்திரங்களுக்கு யார் பொருந்துவார்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன். அருண் மொழி வர்மனாக கமல், வந்தியத் தேவனாக நான், ஆதித்த கரிகாலனாக விஜய்காந்த், நந்தினியாக பாலிவுட் நடிகை ரேகா, குந்தவையாக ஸ்ரீதேவி என என் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது” எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகையை மணந்தார் பிரபல இயக்குனர் ஸ்ரீகணேஷ்!