Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“ஜெயலலிதா மட்டுமில்ல… இவரும் உங்களதான் சொன்னார்”… ரஜினிக்கு சீக்ரெட் சொன்ன கமல்!

“ஜெயலலிதா மட்டுமில்ல… இவரும் உங்களதான் சொன்னார்”… ரஜினிக்கு சீக்ரெட் சொன்ன கமல்!
, புதன், 7 செப்டம்பர் 2022 (15:10 IST)
பொன்னியின் செல்வன் விழா மேடையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒன்றாக பேசியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து நேற்று ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் பொதுவாக புத்தகத்தின் அளவைப் பார்த்துதான் படிப்பேன். பொன்னியின் செல்வன் 2000 பக்கத்துக்கு மேல் என்றதும் படிக்கவே இல்லை. ஆனால் ஒரு முறை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வந்தியத் தேவன் கதாபாத்திரத்துக்கு யாரை நடிக்கவைக்கலாம் எனக் கேட்ட போது அவர் என் பெயரைக் கூறினார். அப்போதுதான் நான் ஆர்வமாகி அந்த நாவலைப் படித்தேன்” எனக் கூறினார்.

இவ்வாறு ரஜினி பேசி முடித்ததும், கமல் குறுக்கிட்டு “1980 களில் இந்த நாவலின் உரிமையை நான் எம் ஜி ஆர் அவர்களிடம் இருந்து வாங்கினேன். அப்போது ஒரு நாள் அன்னை இல்லத்தில் இதுபற்றி பேசிக் கொண்டிருந்த போது நடிகர் திலகம் சிவாஜியும் ‘வந்தியத் தேவன் கதாபாத்திரத்துக்கு உங்களைதான் போட சொன்னார்’ அதற்கு பிரபுதான் சாட்சி. அதை இங்கே சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செட் ரெடியா இருக்கு… ஆனாலும் ஒரு மாதமா ஷூட் போகாத விஷால்… தயாரிப்பாளருக்கு 3 கோடி நஷ்டம்!