மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இதே போல அதன் இரண்டாம் பாகமும் ரிலீஸாகி வெற்றி பெற்றது. தற்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகளில் ஜீத்து ஜோசப் ஈடுபட்டு வருகிறார். த்ரிஷ்யம் முதல் பாகத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் நடித்தார்.
ஆனால் அந்த படத்தில் ரஜினிகாந்தைதான் நடிக்க வைக்க வேண்டும் என தான் விரும்பியதாக ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். அதில் “த்ரிஷ்யம் வந்த போது ரஜினி சார் பாராட்டினார். அந்த படத்தின் ரீமேக்கில் நடித்தால் கதாநாயகனைப் போலீஸார் தாக்குவது போன்ற காட்சிகளைத் தன்னுடைய ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று தயங்கினார். அதற்குப் பின் கமல்ஹாசன் அந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். இதையறிந்ததும் ரஜினி சார் வாழ்த்தினார்” எனக் கூறியுள்ளார்.